தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் பழனிசாமி, ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிரடி ஆய்வு நடத்தி கொரோனா பாதிப்பு குறித்து ஆலோசனைகளை அதிகாரிகளுக்கு வழங்கி வருகிறார். அந்த வகையில் இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் ஆய்வு செய்தார். பின்னர் மாவட்டத்தில் உள்ள புதிய திட்டபணிகளை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதையடுத்து, அந்நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று கூறியுள்ளார். தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கை காரணமாக கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் கொரோனா பணிகளுக்கு 37 ஆம்புலன்ஸ்கள் பயன்பாட்டில் உள்ளன.
திருவள்ளூரில் 102 காய்ச்சல் முகாம்கள் உட்பட மொத்தம் 5,108 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன என்றும் சுமார் 82% அளவுக்கு குடிமராமத்து பணிகள் முடிவடைந்துள்ளன எனவும் தெரிவித்துள்ளார். மேலும், நகரின் ஆற்றின் குறுக்கே ரூ.18 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணிகள் பரிசீலனையில் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட 11 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இந்த ஆண்டே மாணவர் சேர்க்கை நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…