போக்குவரத்து ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு – அமைச்சர் ராஜகண்ணப்பன் விளக்கம்

Published by
பாலா கலியமூர்த்தி

பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்க வாய்ப்பு இல்லை என அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்.

திருநெல்வேலியில் 15 வயது முதல் 18 வயது வரையிலான பள்ளி சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாமினை, போக்குவரத்துதுறை அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்று தொடங்கி வைத்தார்கள். இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதை போல் பொங்கலுக்கும் சிறப்பு பேருந்துகள் கிட்டத்தட்ட 17,000 பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்தார்.

மக்கள் எந்தவித பாதிப்பும், சிரமமில்லாமலும் பயணம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்க வாய்ப்பு இல்லை எனவும் கூறினார். பேருந்துகளில் மாணவர்கள் முறையாக பயணம் செய்வதை கண்காணிக்க போக்குவரத்து துறை மற்றும் காவல்துறை அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு குறித்து விரைவில் நல்ல முடிவு அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

முதலமைச்சர் அறிவித்துள்ள கொரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றப்படும் என்றும் குறிப்பிட்டார். இதனைத்தொடர்ந்து, சசிகலா குறித்த செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, சசிகலாவுக்கு எல்லாம் பதில் சொல்ல நாங்க தயாராக இல்லை எனவும் பதிலளித்தார். இதனிடையே, பொங்கல் தொகுப்பில் வழங்கப்படும் கரும்புகளை விவசாயிகளிடம் இருந்து இடைத்தரகர்களின் தலையீடு இல்லாமல் தமிழக அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று சசிகலா கோரிக்கை விடுத்துள்ளார்.

விவசாயிகளிடம் தமிழக அரசே நேரடியாக கரும்பை கொள்முதல் செய்து, சேர வேண்டிய தொகையையும் விவசாயிகளுடைய வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

சீமான் வீட்டில் நடந்த சம்பவம்..முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதில்!

சீமான் வீட்டில் நடந்த சம்பவம்..முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதில்!

சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல்…

2 hours ago

டாட்டா குட்பை…CT தொடரில் நடையை கட்டிய இங்கிலாந்து…தென்னாப்பிரிக்கா அதிரடி வெற்றி!

கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாபிரிக்கா அணியும் கராச்சி தேசிய மைதானத்தில்…

3 hours ago

மாஸ்டர் சாதனையை மர்டர் செய்த குட் பேட் அக்லி! அடுத்த சம்பவம் லோடிங் மாமே…

சென்னை : மாஸ் வேணுமா மாஸ் இருக்கு...கிளாஸ் லுக் வேணுமா அதுவும் இருக்கு என்கிற வகையில் ரசிகர்களை வெகுவாக கவரும்…

3 hours ago

“சீமான்., அசிங்கமா பேசுற வேலை வச்சிக்காத…” நடிகை வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் இப்போது…

4 hours ago

ENG vs SA : இங்கிலாந்துக்கு என்னதான் ஆச்சு? 200 ரன்கள் கூட தொடல..சுருட்டிய தென்னாப்பிரிக்கா!

கராச்சி : நம்ம இங்கிலாந்து அணிக்கு என்னதான் ஆச்சு என்ற கேள்வியை எழுப்பும் வகையில் மோசமான ஆட்டத்தை சமீபகாலமாக வெளிப்படுத்தி…

5 hours ago

“இன்னும் 8 மாசம் தான்., முதலமைச்சர் தனியா தான் இருப்பார்..,” கெடு விதித்த அண்ணாமலை!

கோவை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணி YMCA மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.  இதில்…

5 hours ago