குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தமிழகத்தில் அதிகரிப்பு – தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அம்பலம்.!

Default Image

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் பள்ளி குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றம் பல மடங்கு அதிகரித்து வருவது என தகவல் அறியும் உரிமை சட்டம் (ஆர்டிஐ) மூலம் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் பள்ளிகளில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் குறித்து மாநில குற்ற ஆவண காப்பகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக தகவல் கேட்கப்பட்டிருந்தது. அதன்படி, பள்ளிகளில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் தற்போது அதிகரித்து வருகிறது என்ற தகவல் அதிர்ச்சியை அளித்துள்ளது. அதாவது, கடந்த 2006ம் ஆண்டு முதல் பாலியல் குற்ற சம்பவங்கள் படிப்படியாக அதிகரிப்பு உள்ளது. இதையடுத்து, 2013-ஆம் ஆண்டுக்கு பிறகு ஆண்டுக்கு சராசரியாக 16 குற்றங்கள் வழக்குகளாக பதியப்பட்டுள்ளன.

2019-ல் இது 25 ஆக உயர்ந்துள்ளது. பின்னர் தமிழகத்தில் பள்ளிகள் அல்லாத இடங்களிலும் சிறுவர்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் மிக அதிகமாகி உள்ளன. அதாவது, 2013-ம் ஆண்டு 419 ஆக பதியப்பட்ட பாலியல் குற்றங்கள், 2014-ல் 1,055 ஆக உயர்ந்துள்ளது. இது 2015-ல் 1,546 ஆகவும், 2016-ல் 1,585 ஆகவும், 2018-ல் 2,052 ஆகவும், 2019-ல் 2,410 ஆகவும் அதிகரித்து வருவது ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளது. மேலும், இந்த ஆண்டில் ஜூலை வரை 2000-க்கும் மேற்பட்ட பாலியல் குற்ற வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

இதனிடையே, இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மீது ஆண்டுக்கு 30,000 மேற்பட்ட வழக்குகள் போக்ஸோ சட்டத்தின் கீழ் பதியப்படுவதாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விவரங்கள் சமீபத்தில் வெளியானது. இது 2018-ல் பாலியல் வன்கொடுமைக் குற்றங்கள் தொடர்பாக போக்ஸோ சட்டப் பிரிவு 4, 6-ன் கீழ் போடப்பட்ட வழக்குகளில் 63,636 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில், ஒரு நாளுக்கு109 குழந்தைகள் பாலியல்தொந்தரவுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இதில் பல சம்பவங்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளியே தெரியாமல் போவதாகவும் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்