மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை 2 மடங்கு உயர்வு – தமிழ்நாடு அரசு!

Students SchoolOpen

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை 2 மடங்கு உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை 2 மடங்காக உயர்த்தி அறிவித்துள்ளது தமிழக அரசு. இதற்காக 314.90 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.2000ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

6 ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ரூ.6000 ஆகவும், 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.8000ஆகவும் உதவித் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், பட்டபடிப்பு பயிலும் மாணவர்களுக்கு ரூ.6000-ல் இருந்து ரூ.12,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்