மாமன்ற உறுப்பினர்களின் குடும்ப பாதுகாப்பு நிதி உயர்வு – சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு!
மாமன்ற உறுப்பினர்களின் குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்வு என சென்னை பட்ஜெட்டில் அறிவிப்பு.
சென்னை மாநகராட்சியின் 2023-24-ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. சென்னை மாநகராட்சி மேயர் பிரியா இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது, பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்த மேயர் பிரியா, சென்னை மாநகர்ச்சி பட்ஜெட்டில் 83 புதிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதில், மாநகராட்சி உறுப்பினர்களின் மேம்பாட்டு நிதி ரூ.35 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோன்று, 2023 – 24ம் நிதி ஆண்டு முதல் மாமன்ற உறுப்பினர் பதவி வகிக்கும் போது, உயிரிழக்கும் உறுப்பினர்களுக்கு, குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.3 லட்சமாக உயர்பட்டுகிறது. அதாவது, மாமன்ற உறுப்பினர்களின் குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.