இவர்களுக்கான குடும்ப ஓய்வூதியம், மாத ஓய்வூதியம் உயர்வு – அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு
மாற்றுத்திறனாளிகளின் திருமணத்திற்கு 4 கிராம் தங்க தாலி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று இந்து சமய அறநிலையத்துறை மீதான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது அமைச்சர் சேகர்பாபு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இதில், குறிப்பாக கோயில்களின் சார்பில் இவ்வாண்டு 600 இணைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்படும். ஏழை குடும்ப பெண்களை சேர்ந்த இணைகளுக்கு கோயில் சார்பில் 4 கிராம் தங்க தாலி, சீர்வரிசை வழங்கப்படுகிறது என தெரிவித்தார்.
மண்டலத்துக்கு 30 இணைகள் வீதம் 600 இலைகளுக்கு கோயில் சார்பில் திருமணம் நடத்தி வைக்கப்படும். ஒருகால பூஜை திட்டத்தின் கீழ் கூடுதலாக 2,000 நிதி வசதியற்ற கோயில்கள் சேர்க்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் 2,000 கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாத உதவித்தொகை ரூ.1000 வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.
இதுபோன்று துறைரீதியிலான கோயில் பணியாளர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.3,000 லிருந்து ரூ.4,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும் கோயில் பணியாளர்களுக்கான குடும்ப ஓய்வூதியம் ரூ.1,500 லிருந்து ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் எனவும் அமைச்சர் சேகர்பாபு அறிவித்த நிலையில், கோயில்களில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகளின் திருமணத்திற்கு 4 கிராம் தங்க தாலி வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.