சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான ரூ.2,000 கோடி சொத்துக்களை பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித்துறையினர் முடக்கினர்.
கடந்த 2017 ஆம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது உறவினர்களின் இல்லங்கள், அலுவலகங்கள் என பல இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் சசிகலா, 60 க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை தொடங்கி ரூ.1500 கோடி வரை வரி ஏய்ப்பு செய்தது வெளிச்சத்திற்கு வந்தது.
இதில் பல கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் வாங்கிய ஆவணங்களும் சிக்கியது. இதனை தொடர்ந்து சசிகலா உறவினர்கள் உட்பட அனைவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன்பின் வருமான வரித்துறையினர், சசிகலாவின் ரூ.1600 கோடி மதிப்பிலான 9 நிறுவனங்களின் சொத்துக்களை கடந்தாண்டு முடக்கினர்.
மேலும், கடந்த 3 ஆம் தேதி சசிகலா பினாமி பெயர்களில் வாங்கிய ரூ.300 கோடி மதிப்பிலான 200 ஏக்கர் மற்றும் 65 சொத்துகளை வருமான வரித்துறையினர் முடக்கிய நிலையில், தற்பொழுது பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் சசிகலா, இளவரசி, மற்றும் சுதாகரனுக்கு சொந்தமான சிறுதாவூர் பங்களா, கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட ரூ. 2,000 கோடி மதிப்பிலான சொத்துக்களை வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளனர்.
டெல்லி : கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க பயணத்தின் போது தொழிலதிபர் எலான் மஸ்க்கை பிரதமர் நரேந்திர மோடி…
சென்னை : தமிழ்நாட்டில் முதல் முறையாக ஏசி பெட்டிகள் கொண்ட முதல் மின்சார ரயில் சேவை இன்று காலை 7…
பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. பெங்களூரு சின்னசாமி…
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…