வருமான வரித்துறை சோதனை அரசியல் நாடகம் – அமைச்சர் மனோ தங்கராஜ்

manothangaraj

தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள், கல்லூரிகள் மற்றும் அவர் தொடர்புடைய இடங்கள் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு தொடர்பாக வந்த புகார்களைத் தொடர்ந்து இந்த சோதனை நடக்கிறது.

இந்த சோதனையானது அமைச்சருக்கு தொடர்புடைய இடங்கள் மட்டுமின்றி, அவரது உறவினர்களின் வீடுகள், நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் என பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

தொடரும் IT ரெய்டு.! விழுப்புரம் மற்றும் கோவையிலும் வருமானவரித்துறை தீவிர சோதனை..!

இந்த நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மனோ தங்கராஜ், தமிழகத்தில் நடைபெற்று வருமானவரித்துறை சோதனை என்பது அரசியல் நாடகம். இன்று 28 மசோதாக்கள் காத்துக் கொண்டிருக்கிறது. அதை நிறைவேற்ற யோக்கியம்  இல்லை.

மக்கள் பணியை செய்ய விடாத ஒன்றிய அரசு, மக்கள் பணியை செய்வதில் இப்படியும் ஒரு தடையை ஏற்படுத்துகிறது. பாஜகவினர் தங்களை பற்றியும், மத்திய அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்தும் பரிசீலனை செய்ய வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகள் தங்களுக்கும் பொருந்துமா, ஏன் பொருந்தவில்லை என்றும் பரிசீலிக்க வேண்டும்  என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்