கோவையில் வருமான வரித்துறை சோதனை நிறைவு!
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு.
கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றது. செந்தில் கார்த்திகேயன், அரவிந்த் ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்று வந்த சோதனையும் நிறைவு பெற்றுள்ளது. இதுபோன்று, அருண் அசோசியேட் நிறுவனம், kiscol நிறுவன அலுவலகங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் ஏற்கனவே கடந்த மே மாதம் சோதனையில் ஈடுபட்டு வந்த நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் கோவை, கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், தற்போது கோவையில் வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றுள்ளது.