பழனியில் பிரபல பஞ்சாமிர்த கடையில் வருமான வரித்துறை ரெய்டு..!
பழனியில் உள்ள சித்தநாதன் பஞ்சாமிர்த கடையின் உரிமையாளர், அசோக் குமார். வரி ஏய்ப்பு செய்ததாக இவர் மீது புகார் வந்தது. இந்நிலையில் இந்த புகாரின் அடிப்படையில், பத்து நாட்களுக்கு முன்னர் அவரின் கடையில் சோதனை நடத்தினர்.
அந்த சோதனையில், ரூ. 93 கோடி வரி ஏய்ப்பு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், அசோக் குமாரின் வீட்டில் தற்பொழுது வருமான வரித்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.