4வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை.!

Income Tax department

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர்பான இடங்களில் 4வது நாளாக வருமான வரித்துறை சோதனை.

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் மின்துறை மற்றும் டாஸ்மாக் ஒப்பதாரர்களின் அலுவலகம், வீடு ஆகிய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 26 ம் தேதி முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதில் குறிப்பாக, அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த 26 ம் தேதி முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் 4-ஆவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சரின் ஆதரவாளர்கள் செந்தில் கார்த்திகேயன் வீடு உள்ளிட்ட இடங்களில் 4-ஆவது நாளாக சோதனை நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக ஈரோட்டில் டாஸ்மாக் ஒப்பந்ததாரர் சச்சிதானந்தம் வீட்டில் அதிகாரிகள் ரெய்டு நடைபெறுகிறது. இதில், சோதனையை தடுக்க முயன்றவர்களை காவல்துறை கைது செய்தும் வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்