சென்னை, காஞ்சிபுரம் உள்பட 60 இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை!
வருமான வரி ஏய்ப்பு தொடர்பாக சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட சுமார் 60 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.
சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட சுமார் 60 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதில், சென்னை தி.நகரில் இயங்கி வரும் காஞ்சிபுரம் வரமகாலட்சுமி பட்டுசேலை நிறுவனம் மற்றும் கடைகளில் வருமானவரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளதாகவும், 5 பேர் கொண்ட குழு சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் தாவல் கூறப்படுகிறது.
காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள வரமகாலட்சுமி பட்டு சேலை கடையிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மகாலட்சுமி கடையின் உரிமையாளர் கோபிநாத் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளராக உள்ளார். வரி ஏய்ப்பு செய்ததாக வந்த தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகம், ஆந்திராவில் சாய் சில்க்ஸ் காலமந்திர் குழுமத்தில் உள்ள 60 இடங்களில் சோதனை நடைபெறுகிறது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம் மட்டுமல்லாமல் ஆந்திரா, தெலுங்கானாவில் உள்ள 60 கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.