தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட அமைப்புகள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், குறிப்பாக அமலாக்கத்துறை சோதனையானது தீவிரமாக நடைபெற்று அமைச்சர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அதே வேளையில், வருமானது அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் தொழிலதிபர்கள் தொடர்புடைய இடங்களில், பல்வேறு நிறுவனங்கள், குவாரிகள், ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தினர். இதில், ஆவணங்கள், ரொக்க பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், சொத்துக்கள் முடக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
கன்னியாகுமரி: நாளை நிவாரண நிதி வழங்கப்படும் – ஆட்சியர் அறிவிப்பு!
இதையடுத்து, வரி மோசடி தொடர்பாக விளக்கம் அளிக்க கோரி பல்வேறு நிறுவனங்களுக்கும், தனி நபர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கட்டுமான நிறுவனம் தொடர்பாக சென்னை, மதுரை, ஈரோடு, கோவை, சேலம், விருதுநகர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, ஈரோட்டை தலைமை இடமாக கொண்டு செயல்படும் தனியார் கட்டுமான நிறுவனம் தொடர்பான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை அமைந்தகரையில் உள்ள கட்டுமான நிறுவனத்தின் கார்ப்ரேட் அலுவலகம், ஈரோடு கருப்பன் வீதியில் உள்ள சிஎம்கே கட்டுமான நிறுவனம், அலுவலகம், சிஎம்கே கட்டுமான நிறுவன அதிபர்கள் குழந்தைசாமி, அவரது மகன்கள் பாலசுப்பிரமணி, வெங்கடாச்சலம் ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதுபோன்று, நாமக்கல்லில் அரசு ஒப்பந்ததாரர் சத்தியமூர்த்தி வீடு, அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…