சென்னையில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை

Income Tax

தமிழகத்தில் வரி ஏய்ப்பு தொடர்பாக அவ்வப்போது வருமானவரித்துறை அதிகாரிகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

மருத்துவமனை மீது தாக்குதல் – 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு : பாலஸ்தீன அதிபர்

அந்த வகையில், சென்னையில் ஸ்டீல் கம்பெனிக்கு சொந்தமான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஆயிரம் விளக்கு, எழும்பூர், மண்ணடி, தாம்பரம் குன்றத்தூர் உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வரிஏய்ப்பு தொடர்பாக அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், சென்னையில் மருந்து நிறுவனங்கள் தொடர்புடைய இடங்களிலும்  வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மருந்து பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் நிறுவனத்தில் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக இந்த சோதனை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்ந்து அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், அதிகாரிகளின் சோதனை மற்றும் விசாரணை நிறைவுபெற்ற பின்பு தான் இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் ஆவணங்கள் குறித்த தகவல்கள் தெரியவரும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்