வருமான வரி சோதனை: அரசியலாக்க வேண்டாம் – கரு.நாகராஜன்
தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள், கல்லூரிகள் மற்றும் அவர் தொடர்புடைய இடங்கள் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, திருவண்ணாமலை, சென்னை, கரூர் உள்ளிட்ட சுமார் 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
2021ம் ஆண்டு மார்ச் மாதம் தேர்தல் பரப்புரையின்போதும் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடந்தது. 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்த நிலையில், இன்று மீண்டும் சோதனை நடைபெற்று வருகிறது.
அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை.!
இந்த சோதனையானது அமைச்சருக்கு தொடர்புடைய இடங்கள் மட்டுமின்றி, அவரது உறவினர்களின் வீடுகள், நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் என பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு தொடர்பாக வந்த புகார்களைத் தொடர்ந்து இந்த சோதனை நடக்கிறது. இந்த சோதனைக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் வருமான வரித்துறை சோதனையை அரசியலாக்க வேண்டாம் என பாஜகவின் கரு.நாகராஜன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர்கூறுகையில், என்ன வருவாய் வந்திருக்கிறது என்பதை வருமான வரித்துறை பல நாட்கள் ஆய்வு செய்த பிறகே சோதனை நடைபெற்று வருகிறது. இது வழக்கமான வருமான வரித்துறை சோதனை தான், இதனை அரசியலாக்க வேண்டாம் என கூறியுள்ளார்.