துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டுள்ளனர் வருமான வரித்துறை அதிகாரிகள்.
தமிழகத்தில் டாஸ்மாக் மற்றும் மின்சாரத்துறை ஒப்பந்ததாரர்கள் மீது வரி ஏய்ப்பு புகார்கள் வருமான வரித்துறைக்கு வந்ததை அடுத்து, கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 20-க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த மே 26-ம் தேதி முதல் ஜூன் 2-ம் தேதி வரை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார், உறவினர்கள், நண்பர்கள் வீடு, அலுவலகம் உள்பட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இதையடுத்து, கடந்த 13-ம் தேதி சென்னை, கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீடுகள் மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பின்னர் நள்ளிரவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னையில் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். அந்த நேரத்தில் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிப்பட்டு, பின்னர் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட செந்தில் பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை நடைபெற்று தற்போது சிகிச்சையில் உள்ளார்.
இந்த சமயத்தில், கரூரில் நேற்று மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவாளர்களான கரூர்-ஈரோடு சாலையில் உள்ள சக்தி மெஸ் உணவக பங்குதாரர்கள் கார்த்தி மற்றும் ரமேஷ் ஆகியோர் வீடுகளில் சோதனையில் ஈடுபட்டனர். 15-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை 9 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனர். கரூருக்கு நேற்று காலை வந்த 10-க்கும் மேற்பட்ட வருமான வரித் துறை அதிகாரிகள், கார்த்திக், ரமேஷ் ஆகியோர் வசிக்கும் வீடுகளில் உள்ள அறைகள் உள்ளிட்ட 6 இடங்களில் ஏற்கெனவே வைக்கப்பட்ட சீலை அகற்றி மீண்டும் சோதனை நடத்தினர்.
இந்த நிலையில், கரூரில் ஜவகர் பஜாரில் உள்ள பழனிமுருகன் நகைக்கடையில் இரண்டாவது நாளாக இன்றும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில், நகைக்கடையில் 2வது நாளாக அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதுபோன்று, செந்தில் பாலாஜி நண்பர் சங்கர் ஆனந்த் வீட்டில் நேற்று வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்ட நிலையில், இன்றும் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…