Ph.D., பயிலும் மாணவர்களுக்கான ஊக்கத்தொகை – வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு!
பிஎச்டி பயிலும் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான ஊக்கத்தொகைக்கு வழிகாட்டுதலை வெளியிட்டது தமிழக அரசு.
Ph.D., பயிலும் SC, ST மாணவர்களுக்கான ஊக்கத்தொகை வழங்கும் முறையில் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. அதில், Ph.D., பயிலும் SC, ST மாணவர்கள் வேறு எந்த வகையான உதவித்தொகையையும் பெறாமல் இருந்தால் மட்டுமே, அவருக்கு தமிழ்நாடு அரசின் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
மேலும், ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு மிகாமலும், 55% மதிப்பெண்கள் இருந்தால் மட்டுமே ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் மாதந்தோறும் ரூ.10,000 என 10 மாதங்களுக்கு ரூ.1 லட்சம் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.