நோயை தொடக்க நிலையில் கண்டறிந்து கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மூலம் பயன்பெற 17,14,000 நபர்கள் இதுவரை பரிசோதனை செய்துள்ளனர். – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை.
சென்னை, ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ மாநாட்டை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் மருத்துவ மாநாடு குறித்தும், தமிழகத்தில் மருத்துவத்துறையில் கொண்டுவரப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் பேசினார்.
அவர் பேசுகையில், ‘ மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் முன்னேற்றம் மிக முக்கியமானதாகும். தற்போது இந்த துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியம் மற்றும் மருத்துவத்துறை செயலாளர் செந்திகுமார் மற்ற அதிகாரிகள் அனைவருக்கும் பாராட்டுக்கள். மக்களுக்கு பயன்படும் வகையில் இந்த மாநாடு கூட்டப்பட்டுள்ளது.’ என தெரிவித்தார்.
மேலும், ‘ அனைத்து வகை அரசு மருத்துவமனைகளையும் சீரமைப்பதற்காக இந்த மாநாடு கூட்டப்பட்டுளது. இதன் மூலம் அரசு மருத்துவமனைகளின் தரம் மேம்படும். கண்ணொளி காப்போம் திட்டோம், 108 ஆம்புலன்ஸ் திட்டம், கலைஞர் காப்பீடு திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதே போல மற்ற மாநிலங்களிலும் செயல்படுத்த படுகிறது.
சாலை விபத்தில் சிக்கியவர்களுக்காக ‘கோல்டன் ஹவர்’ பொன்னான நேரம் எனும் முதல் 48 மணிநேரத்திற்குள் அவருக்கு சிகிச்சை அளிக்க 1 லட்சம் ரூபாய் வரை கொடுக்கப்படுகிறது என தெரிவித்தார்.
நோயை தொடக்க நிலையில் கண்டறிந்து கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மூலம் பயன்பெற 17,14,000 நபர்கள் இதுவரை பரிசோதனை செய்துள்ளனர். மருந்து தட்டுப்பாடு இருக்கிறதா.? மருத்துவமனையில் உரிய வசதி இருக்கிறதா என்பதை ஆராய்ந்து செயல்பட கேட்டுக்கொள்கிறேன் எனவும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் தற்போது 100 சதவீதம் பிரசவம் மருத்துவமனைகளில் தான் நடக்கிறது. இருதய – நுரையீரல் அறுவை சிகிச்சையில் தேசிய அளவில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வில் உலக அளவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தற்போது நோய் எதிர்ப்பு குறைபாடு என்பது பெரிய குறைபாடாக இப்போது உருவாகியுள்ளது என மருத்துவ வல்லுநர்கள் கூறுகிறார்கள். அதனை குணப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மக்களை தேடி மருத்துவம் தற்போது 1 கோடியை எட்டியுள்ளது. எனவும் மருத்துவ மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…