மீண்டும் வருகிறது கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்.! மருத்துவ மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்.! 

Default Image

நோயை தொடக்க நிலையில்  கண்டறிந்து கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மூலம் பயன்பெற 17,14,000 நபர்கள் இதுவரை பரிசோதனை செய்துள்ளனர்.  – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை. 

சென்னை, ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ மாநாட்டை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் மருத்துவ மாநாடு குறித்தும், தமிழகத்தில் மருத்துவத்துறையில் கொண்டுவரப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் பேசினார்.

அவர் பேசுகையில், ‘ மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் முன்னேற்றம் மிக முக்கியமானதாகும்.  தற்போது இந்த துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதற்கு  அமைச்சர் மா.சுப்பிரமணியம் மற்றும் மருத்துவத்துறை செயலாளர் செந்திகுமார் மற்ற அதிகாரிகள் அனைவருக்கும் பாராட்டுக்கள். மக்களுக்கு பயன்படும் வகையில் இந்த மாநாடு கூட்டப்பட்டுள்ளது.’ என தெரிவித்தார்.

மேலும், ‘ அனைத்து வகை அரசு மருத்துவமனைகளையும் சீரமைப்பதற்காக இந்த மாநாடு கூட்டப்பட்டுளது. இதன் மூலம் அரசு மருத்துவமனைகளின் தரம் மேம்படும். கண்ணொளி காப்போம் திட்டோம், 108 ஆம்புலன்ஸ் திட்டம், கலைஞர் காப்பீடு திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதே போல மற்ற மாநிலங்களிலும் செயல்படுத்த படுகிறது.
சாலை விபத்தில் சிக்கியவர்களுக்காக ‘கோல்டன் ஹவர்’ பொன்னான நேரம் எனும் முதல் 48 மணிநேரத்திற்குள் அவருக்கு சிகிச்சை அளிக்க 1 லட்சம் ரூபாய்  வரை கொடுக்கப்படுகிறது என தெரிவித்தார்.

நோயை தொடக்க நிலையில்  கண்டறிந்து கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மூலம் பயன்பெற 17,14,000 நபர்கள் இதுவரை பரிசோதனை செய்துள்ளனர்.  மருந்து தட்டுப்பாடு இருக்கிறதா.? மருத்துவமனையில் உரிய வசதி இருக்கிறதா என்பதை ஆராய்ந்து செயல்பட கேட்டுக்கொள்கிறேன் எனவும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் தற்போது 100 சதவீதம் பிரசவம் மருத்துவமனைகளில் தான் நடக்கிறது. இருதய – நுரையீரல் அறுவை சிகிச்சையில் தேசிய அளவில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வில் உலக அளவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தற்போது நோய் எதிர்ப்பு குறைபாடு என்பது பெரிய குறைபாடாக இப்போது உருவாகியுள்ளது என மருத்துவ வல்லுநர்கள் கூறுகிறார்கள். அதனை குணப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மக்களை தேடி மருத்துவம் தற்போது 1 கோடியை எட்டியுள்ளது. எனவும் மருத்துவ மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்