Union Finance Minister Nirmala Sitharaman [Image Source : Twitter/@MinistryofFinance]
தூத்துக்குடி, தென்காசி,கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி, ஆகிய தென் மாவட்டங்களில் கடந்த வாரம் பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகள், சாலைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்தது. இந்த தொடர் கனமழை எதிரொலியாக பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மழை பாதிப்பில் இருந்து தற்போது நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் மீண்டுவரும் நிலையில், ஒருசில இடங்களில் மழைநீர் வடியாமல் உள்ளது. மழை நீரை அகற்ற அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 21-ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார்.
இந்நிலையில், தென் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்ய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தூத்துக்குடி வருகிறார். அதன்படி, நாளை மறுநாள் நிர்மலா சீதாராமன் அதிகாரிகளுடன் தூத்துக்குடியில் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளார். வெள்ள பாதிப்புகளை நிர்மலா சீதாராமன் நேரில் பார்வை பார்வையிடவில்லை என எதிர்ப்புகள் எழுந்த நிலையில் நாளை மறுநாள் தூத்துக்குடியில் ஆய்வு மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தகக்கது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…