மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி அளிக்கும் திட்டம் எந்த நிலையில் உள்ளது? நீதிபதி கிருபாகரன் கேள்வி
மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி அளிக்கும் திட்டம் எந்த நிலையில் உள்ளது? என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக வழக்கு ஓன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது .பின்னர் இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன்,மாணவர்களின் கல்வி விஷயத்தில் தமிழக அரசு கௌரவம் பார்க்க வேண்டாம். ஐஏஎஸ் அதிகாரி உதயசந்திரனை வேறு துறைக்கு மாற்றினாலும் கூட, ஆலோசனை கூட்டங்களில் அவரை ஏன் சிறப்பு அழைப்பாளராக அழைக்கக் கூடாது? என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி அளிக்கும் திட்டம் எந்த நிலையில் உள்ளது? என்று பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.