வேலூரில் தேர்தல் ஆணையம் சட்டவிதிகளுக்கு உட்பட்டு தான் செயல்படுகிறது-தமிழிசை

Default Image

சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், பொன்.ராதாகிருஷ்ணனுக்கு, எனக்கும் அமைச்சர் பதவி கொடுக்கவில்லையென்று ஆதங்கப்படும் சீமானின் அக்கறைக்கு நன்றி என்று கூறினார்.

மேலும் வேலூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூட்டம் நடத்திய மண்டபத்திற்கு  சீல் வைக்கப்பட்டதற்கு காரணம்  முறையான அனுமதியின்றி கூட்டம் நடத்தியது தான். தேர்தல் சட்டவிதிகளுக்கு உட்பட்டு தான் யாராக இருந்தாலும் நடக்க வேண்டும் .ஆனால்  மீறும்பட்சத்தில் அவர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.எனவே அதில் எந்த தவறும் இல்லை என்று தெரிவித்தார்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்