தூத்துக்குடியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு.!
தென் தமிழகத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. மழை ஓய்ந்த பின்னரும் இன்னும் பல்வேறு இடங்களில் மழைநீர் வெள்ளம் பல்வேறு இடங்களில் தேங்கி நிற்கிறது. மழைநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி, திருநெல்வேலியில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்ய உள்ளார் என தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.
தூத்துக்குடியில் சோகம்…அக்கா கண்முன்னே வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்த தங்கை-தந்தை.!
முதற்கட்டமாக தூத்துக்குடி செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருந்த மக்களை நேரில் சந்தித்து மழை பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். அதன் பின்னர் நிவாரண பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
பின்னர், தூத்துக்குடியில் வெள்ள பாதிக்கப்பட்ட மற்ற பகுதிகளான புதிய பேருந்து நிலையம், குறிஞ்சி நகர் பகுதியில் நேரில் ஆய்வு செய்தார். தூத்துக்குடியில் மற்ற பகுதிகளை ஆய்வு செய்த பின்னர் , திருநெல்வேலி மாவட்டத்தில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய உள்ளார்.