#Breaking:தமிழகத்தை தாக்கும் கரும்பூஞ்சை தொற்று..! ஒருவர் பலி..!

Default Image

தமிழகத்திலும் கரும்பூஞ்சை தொற்று பரவத் தொடங்கியுள்ளது. அதனால் தூத்துக்குடியில்,கருப்பு பூஞ்சை தொற்று பாதித்த ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில்,கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு தற்போது ‘பிளாக் ஃபங்கஸ்’ என்ற கருப்பு பூஞ்சை தொற்று நோயும் பரவுகிறது.இந்த தொற்று நோயானது பஞ்சாப்,ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவில் பரவி வருகிறது.

இந்நிலையில்,தற்போது தமிழகத்திலும் கருப்பு பூஞ்சை தொற்று பரவத் தொடங்கியுள்ளது.அந்தவகையில்,தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள நரசிம்மபுரத்தில் சொந்தமாக வெல்டிங் பட்டறை நடத்தி வரும் 57 வயது முதியவர் ஒருவருக்கு சமீபத்தில் கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டது.

இதனையடுத்து,தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அந்த முதியவர் அனுமதிக்கப்பட்டார்.அங்கு பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா நெகட்டிவ் என ரிப்போர்ட் வந்துள்ளது.இருப்பினும் அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததன் காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.அப்போது,அவருக்கு கண்ணில் கருப்பு பூஞ்சை தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.இதனையடுத்து,அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில்,சிகிச்சை பலனின்றி இன்று காலை அந்த முதியவர் உயிரிழந்தார்.இதனால்,தமிழகத்தில் கருப்பு பூஞ்சை தொற்றினால் ஏற்பட்ட முதல் பலியாக இது கருதப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்