மதுரை-போடி இடையே 10 ஆண்டுகளுக்கு முன் மீட்டர்கேஜ் பாதையில் ரயில் இயங்கி வந்தது.பின்னர் அதை அகலப்பாதையாக மாற்ற திட்டம் அறிவிக்கப்பட்டு கடந்த 2010-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி மதுரை-போடி ரயில் பாதையில் ரயில்கள் நிறுத்தப்பட்டனர். பின்னர் தண்டவாளம் அகற்றப்பட்டு மீட்டர்கேஜ் பாதையை அகலபாதை அமைக்கும் பணி தொடங்கியது.
வருட வருடம் திட்டத்திற்கான மதிப்பீடு அதிகரித்து கொண்ட சென்றதால் மதுரை இருந்து போடி இடையே 90 கி.மீ. தூர ரயில் பாதை அமைக்க ரூ.300 கோடி மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. இந்த 90 கி.மீ. தூர ரயில் பாதையில் 8 பெரிய பாலங்கள் ,190 சிறிய பாலங்கள் அடங்கும். கடந்த 2018-ம் ஆண்டு பட்ஜெட்டில் முதற்கட்டமாக ரூ.80 கோடி மட்டுமே நீதி ஒதுக்கப்பட்டது.
இந்த நீதியை கொண்டு மதுரையில் இருந்து உசிலம்பட்டி வரை 37 கி.மீட்டருக்கு பணிகள் முடித்தன. அதில் 2 பெரிய பாலங்கள், 70 சிறிய பாலங்கள் கட்டப்பட்டுள்ளது.இந்நிலையில் உசிலம்பட்டியில் இருந்து முதல் போடி வரை 53 கி.மீ. தூரம் பணிகள் முடிக்க வேண்டி உள்ளது.
இதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகுமே..?என்ற எண்ணம் மக்கள் மனதில் எழுந்து உள்ளது. இந்நிலையில் மீதம் உள்ள பணியை முடிக்க வருகின்ற பிப்ரவரி மாதம் தாக்கலாகும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டு விரைவில் பணியை முடிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…