தமிழகத்தில் வாக்குப்பதிவின்போது 46 பூத்களில் தவறு நடந்துள்ளது!மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவு வர வாய்ப்பு
தமிழகத்தில் வாக்குப்பதிவின்போது 46 பூத்களில் தவறு நடந்துள்ளது என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாகு தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 7-கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது.இதில் 5-கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.தமிழகத்தில் 2-ஆம் கட்டமாக தேர்தல் நடைபெற்றது.மக்களவைதொகுதிகளுடன் சேர்த்து இடைத்தேர்தலும் நடைபெற்றது.
இந்நிலையில் இன்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாகு செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில்,தமிழகத்தில் வாக்குப்பதிவின்போது 46 பூத்களில் தவறு நடந்துள்ளது என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாகு தெரிவித்துள்ளார்.மேலும் தேனி உள்பட 46 பூத்களில் தவறு நடந்ததாக தகவலால், மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவு வர வாய்ப்பு உள்ளது.மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்பட்டால் மின்னணு இயந்திரங்கள் தேவை என்பதால் இடமாற்றம் செய்யப்பட்டது.13 மாவட்டங்களில் ஈரோடு, தேனி மாவட்டங்களில் மட்டுமே மின்னணு இயந்திரங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.மாதிரி வாக்குப்பதிவின்போது சில மையங்களில் அதிகாரிகள் தவறு செய்தது தெரிய வந்தது என்று தெரிவித்துள்ளார்.