கோகுல்ராஜ் கொலை வழக்கு.! சுவாதியின் மேல்முறையிட்டு மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி.!
உச்சநீதிமன்றத்தில் கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதி அளித்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
கோகுல் ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு மதுரை உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனை தீர்ப்பு வழங்கி இருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து யுவராஜ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் கோகுல் ராஜ் கொலை வழக்கின் முக்கிய சாட்சியான சுவாதி, பிறழ்சாட்சியம் அளித்தார். இது வழக்கில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
இதனை எதிர்த்து, மதுரை உயர்நீதிமன்றம் தாமாக முன்வைத்து உச்சநீதிமன்றத்தில் சுவாதிக்கு எதிராக வழக்கு தொடர்ந்து இருந்தது. இதற்கு எதிராக சுவாதி மனு அளித்து இருந்தார். இந்நிலையில் சுவாதி அளித்து இருந்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.