தமிழகத்தில் மக்களவை தேர்தலும், 22 சட்டமன்ற தேர்தலும் நடைபெற்று முடிவடைந்து விட்டது. இந்த இரு தேர்தலில்களிலும் திமுக மாபெரும் வெற்றியை நிகழ்த்தியுள்ளது. இதனால் திமுக தொடர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர்கள் அனைவரும் படு தோல்வி அடைந்துள்ளனர்.தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசையை திமுக வேட்பாளர் கனிமொழி 3 லட்சத்து 47 ஆயிரத்து 209 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
திமுக வேட்பாளர் கனிமொழி -563143வாக்குகள் பெற்றுள்ளார்.தமிழக பாஜக தலைவர் தமிழிசை- 215934 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவி உள்ளார்.
மேலும் பாஜகவின் மற்றொரு நட்சத்திர வேட்பாளரான மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி தொகுதியில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் வசந்தகுமாரிடம் தோல்வியை தழுவி உள்ளார்.காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் வசந்தகுமார்- 627235 வாக்குகள் பெற்றுள்ளார். பொன்.ராதாகிருஷ்ணன் -367302 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவியுள்ளார்.வசந்தகுமார்- 259933 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.
மற்றொரு முக்கியமான வேட்பாளரான பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவும் சிவகங்கை தொகுதியில் தோல்வியை தழுவியுள்ளார். இவரை எதிர்த்து முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிட்டார்.இவர் 566104 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.ஆனால் ஹெச்.ராஜா 233860 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவியுள்ளார். கார்த்தி சிதம்பரம் 332244 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.
மேலும் பாஜகவின் மற்றொரு வேட்பாளரான ராதாகிருஷ்ணன் கோவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார்.இவரை எதிர்த்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் நடராஜன் 571150 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.ராதாகிருஷ்ணன் 392007 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவியுள்ளார்.நடராஜன் 179143 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.
இந்த முக்கிய வேட்பாளர்களின் தோல்வி பாஜகவிற்கு தமிழகத்தில் பெரும் அடியாக அமைத்துள்ளது அரசியல் விமர்சகர்கள் கருத்துதெரிவித்து வருகின்றனர்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…