ஒரே கிராமத்தில் 100 பேரின் பெயர் ஒரே மாதிரி இருப்பதால் குழப்பம் அடையும் தேர்தல் அதிகாரிகள்
தமிழகத்தில் நாளை மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.நாளை தமிழகத்தில் 65 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதற்காக தேர்தல் ஆணையம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் என 3 லட்சத்திற்கு மேற்பட்டவர்களை தேர்தல் ஆணையம் நியமித்து உள்ளது.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பாப்பணம் கிராமத்தில் ஒரே பெயரை கொண்ட 100 பேர்கள் உள்ளதால் தேர்தல் வரும் போது தேர்தல் அதிகாரிகள் ஓவ்வொரு முறையும் குழப்பம் அடைவதாக கிராம மக்கள் வேடிக்கையாக கூறுகின்றனர்.
பாப்பணம் கிராமத்தில் மொத்தம் உள்ள வாக்காளர்கள் எண்ணிக்கை 395 பேர் அதில் 100 பேர் முனுசாமி பெயரை கொண்டவர்களாக உள்ளனர்.இதனால் தேர்தல் அதிகாரிகள் குழப்பம் அடைந்து வருகின்றனர்.