நாடாளுமன்ற திறப்பு விழாவில் பா.ம.க. பங்கேற்கும் – அன்புமணி ராமதாஸ்
புதிய நாடாளுமன்றக் கட்டிடம் திறப்பு விழாவில் பா.ம.க. பங்கேற்கும் என்று அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு.
இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்விட்டர் பக்க பதிவில், டெல்லியில் வரும் 28-ஆம் தேதி புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் திறப்பு விழா நடைபெறவுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க அந்த நிகழ்வின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவில் பா.ம.க. கலந்து கொள்ளும் என்றுள்ளார்.
புதிய நாடாளுமன்றம் கட்டடத்தை குடியரசு தலைவர் தான் திறக்க வேண்டும் என்றும் திறப்பு விழாவுக்கு குடியரசு தலைவருக்கு பாஜக அரசு அழைப்பு விடுக்கவில்லை என கூறியும் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்கட்சிகள் கூட்டாக புறக்கணிப்பதாக அறிவித்தனர்.
இதனால், புதிய நாடாளுமன்றம் திறப்பு விழாவில் 25 கட்சிகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குறைந்தது 20 எதிர்க்கட்சிகள் இவ்விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளன. இந்த சமயத்தில், புதிய நாடாளுமன்றக் கட்டிடம் திறப்பு விழாவில் பா.ம.க. பங்கேற்கவுள்ளது.