சாதி, மதத்தின் பெயரால் தமிழகத்தில் பிளவு ஏற்படக்கூடாது …!மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்
கன்னியாகுமரி மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து முதலமைச்சர் பழனிச்சாமியின் பார்வைக்கு கொண்டு சென்றேன் என்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இன்று நாகர்கோவிலில் முதலமைச்சர் பழனிச்சாமியை சந்தித்த பின் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறுகையில்,கன்னியாகுமரி மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து முதலமைச்சர் பழனிச்சாமியின் பார்வைக்கு கொண்டு சென்றேன். நாகர்கோவிலை மாநகராட்சியாக்க வேண்டும் என முதலமைச்சர் பழனிச்சாமியிடம் கோரிக்கை வைத்தேன். சாதி, மதத்தின் பெயரால் தமிழகத்தில் பிளவு ஏற்படக்கூடாது என்றும் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.