மக்களவை தேர்தலில் 12,915பேரின் தபால் வாக்குகள் நிராகரிப்பு – தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம்
மக்களவை தேர்தலில் சரியான விவரங்களை அளிக்காததால் 12,915 பேரின் தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.அதில்,மக்களவை தேர்தலில் சரியான விவரங்களை அளிக்காததால் 12,915பேரின் தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தது.அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவல்துறையினருக்கு 4,35,003 பேருக்கு தபால் ஓட்டுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது.அதில் 4,10,200 பேர் வாக்களித்தனர்.அதில் 3,97,291 வாக்குகள் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று தெரிவித்தது.
இதன் பின் தபால் வாக்குகள் தொடர்பாக குழப்பம் ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியது.மேலும் தபால் ஓட்டுக்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் 2 நாட்களில் இணையதளங்களில் பதிவேற்ற வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.