திமுகவிடம் நாங்க 4 கேட்டோம்.. 2 சீட் கொடுத்துருக்காங்க.! திருமாவளவன் பேட்டி.!
DMK – VCK : மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் கூட்டணி கட்சிகள் தங்கள் தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. காலையில் மதிமுகவுக்கு ஒரு மக்களவைத் தொகுதியும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பும் வழங்க இறுதி முடிவு செய்யப்பட்டது.
Read More – திமுக – மதிமுக தொகுதி பங்கீடு.! வேட்பாளர் யார்.? எந்த தொகுதியில் போட்டி.?
இதனை தொடர்ந்து விசிக உடன் கூட்டணி பேச்சு வார்த்தை இறுதி முடிவு எட்டப்பட்டு உள்ளது. முன்னதாக காலையில் தலைமைச் செயலகத்தில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அதன் பிறகு, திருமாவளவன், திமுக தலைமை அலுவலகத்திற்கு சென்று திமுக நாடாளுமன்ற தொகுதி பங்கீடு ஆலோசனை குழுவுடன் ஆலோசனை நடத்தி பின்னர் செய்தியாளர்களை சந்தித்து தேர்தல் கூட்டணி குறித்த விவரங்களை அறிவித்தார்.
Read More – புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம்.! அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதி.!
அவர் பேசுகையில், திமுக கூட்டணியில் இரண்டு தனி தொகுதிகளில் போட்டியிட இறுதி முடிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 2019ஆம் ஆண்டு போல இந்த முறையும் விழுப்புரம் மற்றும் சிதம்பரம் ஆகிய தனி தொகுதிகளில் போட்டியிட உள்ளோம். கடந்த முறை போல ஒவ்வொரு கட்சியும் கூட்டணி உடன்பாட்டோடு செயல்பட ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
நாங்கள் ஆரம்பத்தில் 3 தனி தொகுதி மற்றும் 1 பொது தொகுதி கேட்டிருந்தோம். பிறகு 2 தனி தொகுதி , ஒரு பொதுத் தொகுதி கேட்டிருந்தோம். தொடர்ந்து ஆலோசனை நடத்தி இந்திய அரசியல் சூழலை கருத்தில் கொண்டு, விரிவான கலந்தாய்வுக்கு பிறகு இரண்டு தனி தொகுதி என்ற முடிவு எட்டப்பட்டு உள்ளது.
Read More – மகளிர் தினத்தன்று பிரதமர் கொடுத்த அறிவிப்பு… சமையல் சிலிண்டர் விலை அதிரடி குறைவு!
இந்த தேர்தலில் நாங்கள் எங்கள் தனி சின்னமாகிய பனை சின்னத்தில் போட்டியிடுவோம். அதற்காக தேர்தல் ஆணையத்திடம் முன்னரே மனு கொடுத்துள்ளோம். ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கர்நாடகா மற்றும் கேரளாவில் தலா 3 தொகுதிகளில் நாங்கள் விசிக சார்பில் போட்டியிட உள்ளோம் என விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.