தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 479 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 479 ஆக பதிவாகியுள்ளது.
- சென்னையில் மட்டும் இன்று 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- கடந்த 24 மணி நேரத்தில் 434 பேர் குணமடைந்துள்ளனர்.
- தமிழகத்தில் இன்று உயிரிழப்பு ஏதும் இல்லை.
- தமிழகம் முழுவதும் 4,865 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.