தமிழகத்தின் உள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் வரும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் ….! சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தின் உள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் வரும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில், டெல்டா உட்பட தமிழகத்தின் உள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் வரும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்.சென்னையில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இலங்கை அருகே காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் சென்னையில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.