முதல் ஆய்வு கூட்டம் நிறைவு.! பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி.!
தற்போது நடைபெற்ற முதல் ஆய்வு கூட்டத்தில், எப்படி இந்த துறை செயல்படுகிறது என்பதை நான் தெரிந்து கொண்டேன். – புதிய பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு.
தமிழக அரசின் அமைச்சரவையானது அண்மையில் மாற்றப்பட்டது. இதில் பால்வள துறை அமைச்சராக பொறுப்பில் இருந்த எம்எல்ஏ நாசர் விடுவிக்கப்பட்டு அமைச்சர் மனோ தங்கராஜூக்கு இலாகா மாற்றப்பட்டு பால்வளத்துறை பொறுப்பு வழங்ப்பட்டது.
அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்தை இன்று அமைச்சர் மனோ தங்கராஜ் நடத்தினார். அந்த ஆய்வு கூட்டம் முடிந்தவுடன் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ் பல்வேறு தகவல்களை குறிப்பிட்டார்.
அவர் கூறுகையில், பால்வளத்துறை என்பது மக்களுக்கான சேவையும், வியாபாரமும் சம்பத்தப்பட்ட துறையாகும். தற்போது நடைபெற்ற கூட்டத்தில், எப்படி இந்த துறை செயல்படுகிறது என்பதை இந்த முதல் ஆய்வு கூட்டத்தில் நாங்கள் தெரிந்து கொண்டோம். தினந்தோறும் 34 லட்சம் லிட்டர் பால் ஆவீன் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. நிறைய பால் பொருட்கள் தயாரிக்கப்பட்டு, மலிவான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. பால் வளத்துறையினை நல்ல முன்னேற்றம் காணுவதற்கான வழிகள் , இந்த துறைக்கு இருக்கும் சவால்களை கண்டறிந்து அதனை சரி செய்யும் நடவடிக்கைகள் குறித்தும் அடுத்ததடுக்க நகர்வுகள் இருக்கும் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேசினார்.