BREAKING:சூழல் ஏற்பட்டால் கமலோடு இணைவேன் – ரஜினி அதிரடி..!
சென்னையில் இன்று ரஜினி செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது ” மக்களின் நலனுக்காக கமலுடன் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவேன் என கூறினார். ஓபிஎஸ் எனக்கு கண்டனம் தெரிவித்தது அவரது தனிப்பட்ட கருத்து.அதுகுறித்து பதில் கூற விரும்பவில்லை என கூறினார்.
இதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய கமல், “தமிழகத்தின் ரஜினியுடன் இணையும் சூழல் வந்தால் இணைய தயார்.நானும் ,ரஜினியும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் இணைவோம் ,சேர்ந்து பயணிக்க வேண்டும் என்றால் பயணிப்போம் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.