இடைத்தேர்தலில் அதிமுக 5,000 முதல் 10,000 வாக்குகள் ‘அந்த’ காரணத்தால் வாங்கும்.! டி.டி.வி.தினகரன் கணிப்பு.!

Default Image

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை எனும் சின்னத்திற்காக மட்டும் வேண்டுமானால் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வாக்குகள் பெறுவார்கள். – டிடிவி.தினகரன் பேட்டி.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் எல்லாம் முடிந்து 83 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. நாளை மறுநாள் (பிப்ரவரி 10) அன்று வாபஸ் பெற கடைசி நாள் என்பதால், அன்றைய தினம் யார் யார் போட்டியிடுகிறார்கள் என்ற விவரம் வெளியாகும்.

திமுக – அதிமுக : இதில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் இவிகேஎஸ்.இளங்கோவன் களம்காண்கிறார். அதிமுக கட்சி சார்பில் முன்னாள் எம்எல்ஏ தென்னரசு களம்காண்கிறார். அடுத்து, தேமுதிக, நாம் தமிழர் கட்சி சார்பிலும் வேட்பாளர்கள் களம் காண்கிறார். இதில், அமமுக சார்பில் சிவபிரசாத் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்தார் .

குக்கர் சின்னம்  : ஆனால், அமமுக வேட்பாளருக்கு குக்கர் சின்னம் ஒதுக்காத காரணத்தால், தற்போது வேறு சின்னம் , நாடாளுமன்றத்தில் வேறு சின்னம் என்றால் குழப்பம் வரும் என கருதி இடைத்தேர்தலில் இருந்து அமமுக விலகி கொள்வதாக அமமுக கட்சி தலைவர் டிடிவி.தினகரன் அறிவித்தார்.

அமமுக விலகல் :  இந்நிலையில் ,இன்று தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் பேசுகையில், தேர்தல் அறிவித்தவுடன், நாங்கள் வேட்பாளரை அறிவித்துவிட்டு, தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினோம். அடுத்து, வேட்புமனு தாக்கல் செய்தோம். தேர்தல் ஆணையம், குக்கர் சின்னம் வழங்க முடியாது என 7ஆம் தேதி தான் கடிதம் அனுப்பிய காரணத்தால் போட்டியில் இருந்து விலகிவிட்டோம். ஒருவேளை அதற்கு முன்னரே வந்த்திருந்தால் உச்சநீதிமன்றம் சென்றிருப்போம். என குறிப்பிட்டார்.

இரட்டை இலை : அடுத்து மேலும் கூறுகையில், இரட்டை இலை சின்னம் தற்போது எடப்பாடி பழனிசாமிக்கும் சொந்தமில்லை. ஓ.பன்னீர்செல்வத்துக்கும் சொந்தமில்லை. தமிழ்மகன் உசேனுக்கு சொந்தம் என்றுதான் உச்சநீதிமன்றம் சொல்லி கையெழுத்திடும் அதிகரத்தை கொடுத்துள்ளது. அந்த இரட்டை இலை சின்னம் தலைவர் எம்ஜிஆர் மற்றும் அம்மாவிடம் இருந்த போது மட்டுமே சில மேஜிக் நிகழ்ந்தது.

விரைவில் ஒன்று சேர்வார்கள் : தற்போது இரட்டை இலை செல்வாக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வருகிறார்கள். கடந்த நான்கரை ஆண்டுகள் ஆட்சியில் சம்பாதித்த நிதியை வைத்து இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார் பழனிசாமி. ஆனால் இரட்டை இலை எனும் சின்னத்திற்காக மட்டும் வேண்டுமானால் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வாக்குகள் பெறுவார்கள் எனவும், அனைவரும் எங்களோடு கைகோர்ப்பார்கள். அந்த காலம் வெகு விரைவில் வரும் என டிடிவி.தினகரன் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்