ஈரோடு கிழக்கில் 3வது இடம் பிடித்த ‘நோட்டா’! சுற்று முடிவுகள் தெரியுமா?
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தற்போது வரையில் எண்ணப்பட்ட முடிவுகளில் 769 வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகியுள்ளது.
![Erode East By Election - VC Chandrakumar - Seethalakshmi](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Erode-East-By-Election-VC-Chandrakumar-Seethalakshmi.webp)
ஈரோடு : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட பிரதான கட்சிகள் வேட்பாளர்களை களமிறக்கவில்லை என்பதால் இந்த முறை போட்டி என்பது திமுக vs நாதக என்று நிலவியது.
இதனால், ஆளும் திமுக கட்சி வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் தான் வெற்றி பெறுவார் என்று கணிக்கப்பட்டன. அதற்கேற்றாற்போலவே காலை முதல் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. தற்போது வரையில், திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் 22,682 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 3,970 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
இந்த தேர்தலில் 3வது இடத்தை தொடர்ந்து அடுத்தடுத்த சுற்றுகளில் நோட்டா (NOTA) பெற்று வருகிறது. தேர்தலில் போட்டியிட்ட யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை எனும் விருப்பத்தை பலர் தேர்வு செய்துள்ளனர். இதில் முதல் சுற்றில் 264 வாக்குகள் பதிவாகின. இரண்டாம் சுற்றில் 517 வாக்குகள் பதிவாகின. தற்போது வரையில் 769 வாக்குகள் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர் என முன்னிலை நிலவர முடிவுகள் வெளியாகி வருகின்றன. நோட்டா தான் 3ஆம் இடமும் பிடித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
18 நாட்கள் 36 கதாபாத்திரங்கள்.. நாளை முதல் மோகன் லால் நடிக்கும் ‘எம்புரான்’ படத்தின் அப்டேட்.!
February 8, 2025![L2E EMPURAAN](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/L2E-EMPURAAN.webp)
அதிர்ச்சி மேல் அதிர்ச்சி! கெஜ்ரிவால் தோல்வி., மணீஷ் சிசோடியா தோல்வி!
February 8, 2025![Arvind Kejriwal - Manish sisodia](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Arvind-Kejriwal-Manish-sisodia.webp)