தமிழகத்தில் தற்போதைய சூழலில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய அவசியம் இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
H1N1 வைரஸ் காய்ச்சல் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இன்புளுயென்சா வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படும் நிலையில், காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், H1N1 வைரஸ் காய்ச்சல் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் தற்போதைய சூழலில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்துள்ளார். வைரஸ் காய்ச்சல் பரவுவதையடுத்து ஓபிஎஸ், ஜி.கே.வாசன் உள்ளிட்ட தலைவர்கள் பள்ளிக்கு விடுமுறை அளிக்குமாறு அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.