பெண் எஸ்.பி.யை மிரட்டிய புகாரில்.., எஸ்.பி. கண்ணன் சஸ்பெண்ட்..!

Default Image

பெண் எஸ்.பி.யை மிரட்டிய புகாரில் வழக்குப் பதிவுக்கு ஆளான எஸ்.பி. கண்ணன் சஸ்பெண்ட் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

அண்மையில் முதல்வர் டெல்டா மாவட்ட சுற்றுப்பயணம் சென்றபோது சட்டம் ஒழுங்குப் பிரிவில் சிறப்பு டி.ஜி.பியாக இருக்கக்கூடிய ராஜேஷ் தாஸ் பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறி அந்த பெண் எஸ்.பி டி.ஜி.பி மற்றும் உள்துறைச் செயலாளர் ஆகியோரைச் சந்தித்து ராஜேஷ் தாஸ் மீது பாலியல் புகார் அளித்தார்.

பெண் ஐ.பி.ஸ் அதிகாரி கொடுத்த பாலியல் புகாரின் பேரில் ராஜேஷ் தாஸ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அந்த பெண் எஸ்.பி சென்னையில் டிஜிபியிடம் புகார் அளிக்க காரில் வந்தபோது, செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணன் வழிமறித்து மிரட்டி புகார் செய்ய வேண்டாம் கூறியதாக கூறப்படுகிறது.

பெண் எஸ்.பி.யை தடுத்து மிரட்டியது தொடர்பாக தொடர்பாக எஸ்.பி. கண்ணன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பெண் எஸ்.பி.யை மிரட்டிய புகாரில் வழக்குப் பதிவுக்கு ஆளான எஸ்.பி. கண்ணன் சஸ்பெண்ட் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்