[Representational Image]
கடலூர் மாவட்டம் புளியங்குடி கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி. இவருக்கு ஜீவா என்ற 12 ஆம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளார். இவர் விருத்தாச்சலத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்று வருகிறார். மேலும் அதே ஊரை சேர்ந்த சுப்ரமணி என்பவரின் மகன் ஆனந்த் மின்வாரியத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று காலை ஜீவா பள்ளிக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு சென்று ஆனந்த் அவரிடம் பேசிய போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் ஆத்திரமடைந்த ஆனந்த் மாணவன் ஜீவாவை சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடியுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு சென்ற போலீசார் ஜீவாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த குற்றவாளி ஆனந்தை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
சென்னை, தாம்பரத்தில் மொட்டை அடித்து மாறுவேடத்தில் சுற்றித்திரிந்த ஆனந்தை போலீசார் கைது செய்தனர். ஓரினச்சேர்க்கை காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக போலீசார் விசாரணையில் தகவல் தெரிவித்துள்ளனர்.
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர்…
அகமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தொடரின் 64-வது போட்டி நேற்று நரேந்திர மோடி…
சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 2-3 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…
சென்னை : தமிழ்நாட்டில் 2025-2026 கல்வியாண்டிற்காக அரசு, அரசு உதவி பெறும், மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 2, 2025 அன்று…
ராஜஸ்தான் : நேற்று தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி ராஜஸ்தான் பிகானரில் இருந்து காணொளி மூலம்…
கோவை : மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில், அதிமுக முன்னாள் அமைச்சரும், கட்சியின் பொருளாளருமான திண்டுக்கல்…