இடைத்தேர்தலில் தேமுதிக தனித்து போட்டி..! வேட்பாளர் அறிவிப்பு..!
ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆனந்த் தேமுதிக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு இடை தேர்தலில் போட்டியிடுவது குறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் கட்சி நிர்வாகிகளுடன் அரசியல் மேற்கொண்ட நிலையில், தற்போது தேமுதிக இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட உள்ளதாக அறிவித்து இருந்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரேமலதா விஜயகாந்த், ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆனந்த் வேட்பாளராக அறிவித்துள்ளார்.
மேலும், இன்றைய நிலையில் தேமுதிக எந்த கட்சியுடனும் கூட்டணியில் இல்லை. காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் கேப்டனின் நெருங்கிய நண்பர். திருமகன் ஈவேரா மறைந்த சுவடுகள் கூட இன்னும் மாறாத நிலையில், இடைத்தேர்தல் அவசரமாக நடத்தப்படுவது வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார்.