குளியலறையில் “காப்பாத்துங்க ஹரி” என ரத்தத்தால் எழுதிய மனைவி..! எங்கே எனது மனைவி தவிக்கும் கணவர்..!

சேலம் மாவட்டம் சின்னதிருப்பதி சார்ந்தவர் ஹரிஹரன். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. ஹரிஹரன் ஜவுளி தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் ஹரிஹரன் வழக்கம் போல வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பினார். அப்போது வீட்டில் மனைவி தமிழ்ச்செல்வி இல்லை வீட்டில் ரத்தக்கறையுடன் ஹாக்கி ஸ்டிக் ஒன்று வீட்டில் இருந்தது.
மேலும் தரையில் சில இடங்களில் ரத்தம் சிந்திக் கிடந்தது இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கணவர் ஹரிஹரன் வீடு முழுவதும் தமிழ் செல்வியை தேடியுள்ளார். கடைசியாக குளியல் அறையில் சென்று பார்த்தபோது குளியல் அறையின் சுவற்றில் ரத்தத்தால் “விமல் ஆளுங்க காப்பாத்துங்க ஹரி” என எழுதப்பட்டிருந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஹரிஹரன் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.அங்கு வந்த காவல்துறையினர்மற்றும் தடவியல் வல்லுநர்கள் தடயங்களை சேகரிக்கத்தனர். எழுதப்பட்ட வார்த்தைகளும் , ரத்தக்கறையும் இருந்ததால் தமிழ்செல்வி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.விமல் என்பவர் ஹரிஹரனிடம் வேலை செய்பவர் எனவே இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்திய வருகின்றனர்.