தமிழகத்தில் தாறுமாறு உயர்வு…1 கிலோ தக்காளி விலை இவ்வளவா? – மக்கள் அதிர்ச்சி.!

தமிழகத்தில் சென்னை,மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தக்காளி விலை இன்று கடுமையாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் செடியில் உள்ள தக்காளி அழுக தொடங்கி உற்பத்தி குறைந்துள்ளது.மேலும்,வெளியூர் வரத்தும் குறைந்துள்ளது.
இந்நிலையில்,தமிழகம் முழுவதும் தக்காளி விலை இன்று கடுமையாக உயர்ந்துள்ளது. அதன்படி,சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கடந்த வாரம் 1 கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை விற்கப்பட்டு வந்த தக்காளி விலை தற்போது இரு மடங்காக உயர்ந்துள்ளது.
குறிப்பாக சில்லறை வணிகத்தில் ஒரு கிலோ ஹைபிரிட் தக்காளி ரூ.45 க்கும்,நாட்டு தக்காளி ரூ.50 க்கும் விற்கப்படுகிறது.கோயம்பேடு சந்தையில் 15 கிலோ எடை கொண்ட தக்காளி பெட்டி ரூ.400 வரை விற்கப்படுகிறது. அதேபோல,மதுரையில் சில்லறை வணிகத்தில் கடந்த வாரம் ஒரு கிலோ 15 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி இன்று ரூ.50 க்கு விற்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் தக்காளியின் இத்தகைய விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விலை உயர்வு ஒரு புறம் மக்களை அதிர்ச்சியடைய செய்தாலும்,மறுபுறம் வெளியூர் வரத்து குறைந்ததால் நாட்டுத்தக்காளியின் கொள்முதல் விலை உயர்ந்ததில் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இதனைத்தொடர்ந்து, இன்னும் சில நாள்களுக்கு தக்காளி விலை உயர்ந்தேதான் காணப்படும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025