தமிழகத்தில் அடுக்குமாடி மின்கட்டணம் குறைப்பு..! இன்று முதல் அமல்.! 

TNEB Electricity Bill

அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போர் பொது பயன்பாடாக பயன்படுத்தும் மோட்டார், மின்விளக்குகள் போன்ற மின் சாதனங்களுக்கு மின் கட்டணமாக ஒரு யூனிட்டிற்கு 8 ரூபாய் 15 பைசா செலுத்த வேண்டி இருந்தது. இந்த நடைமுறையை கடந்த செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாற்றியமைத்து உத்தரவிட்டார்.

அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மின்தூக்கி இல்லாத மூன்று மாடிக்கும் குறைவாக உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், 10 வீடுகளுக்கும் குறைவாக உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவைகளுக்கு பொது பயன்பாட்டு மின் கட்டணமானது 8 ரூபாய் 15 பைசாவிலிருந்து 5 ரூபாய் 50 பைசாவாக குறைக்கப்படும் என்று அறிவித்தார்.

7,108 கோடி ரூபாய் முதலீடு.. 22,000 வேலைவாய்ப்புகள்…  அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள்.! 

முதல்வரின் அறிவிப்பை தொடர்ந்து, நேற்று தமிழக மின்சாரத் துறை இது தொடர்பான அறிவிப்பாணையை வெளியிட்டது. அதில், தமிழக அரசின் கொள்கை வழிகாட்டுதலின்படி தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் புதிய குறைக்கப்பட்ட மின் கட்டணமாக, பத்து வீடுகள் அல்லது அதற்கு குறைவாக உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், மூன்று மாடிகள் அல்லது அதற்கு குறைவாக உள்ள மின் தூக்கி வசதி இல்லாத அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு புதிய தாழ்வழுத்த மின் கட்டண வகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பொது பயன்பாட்டு மின் கட்டணம் ஒரு யூனிட்டு 5 ரூபாய் 50 பைசா வசூலிக்கப்படும் என்றும் இந்த நடைமுறையானது இன்று முதல் (நவம்பர் 1) அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் மேற்கண்ட விதிமுறைகளுக்கு உட்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளின் பொது விநியோகம் பயன்பாட்டில் பயன்படுத்தப்படும் மின்சார கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்