#Breaking:மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி…தமிழகத்தில் டாஸ்மாக் மதுபாட்டில்கள் விலை உயர்வு!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுப்பாட்டில்களின் விலை ரூ.10 முதல் ரூ.80 உயர்த்தப்பட்டுள்ளது.அந்த வகையில்,குவாட்டர் ஒன்றுக்கு சாதாரண ராகங்களுக்கு ரூ.10 ற்றும் நடுத்தர,உயர்தர ராகங்களுக்கு ரூ.20 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.
ஆஃப் பாட்டில் சாதாரண ரகம் ரூ.20,நடுத்தர ,உயர்தர ரகம் ரூ.40 வரையும்,ஃபுல் பாட்டிலுக்கு சாதாரண ரகங்களுக்கு ரூ.40,நடுத்த மற்றும் உயர்தர ரககங்களுக்கு ரூ.80 வரையும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மதுபானங்களின் விலையை உயர்த்தியதால் அரசுக்கு ஒரு நாளைக்கு ரூ.10.35 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என கூறப்படுகிறது.மேலும்,அரசுக்கு ஆண்டுக்கு ரூ.4,396 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,புதிய விலைப்பட்டியலை டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள் அலுவகத்தில் வந்து பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.