தமிழகத்தில் சூறை காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
தென்கிழக்கு வங்கக்கடல், இந்திய பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை நிலவுவதால், இன்று தமிழகத்தில் சில இடங்களில் 40 முதல் 50 கி.மீ வேகத்தில் சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இன்று தொடங்கி 24-ம் தேதி வரையிலும் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.