தமிழ்நாட்டில் அதிகாரிகளே வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளனர்- அண்ணாமலை..!
பொதுப்பணம் தனிப்பட்ட பணமாக மாறி உள்ளது. வருமான வரித்துறை அமலாக்கத்துறை சோதனையில் தெரியவந்துள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜக உடன் கூட்டணி இல்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அறிக்கை வெளியிடப்பட்டது. பின்னர் அண்ணாமலை டெல்லி சென்று தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்தார். கடந்த 5-ஆம் தேதி பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைப்பெற்றது.
இந்தநிலையில், இன்று சென்னையில் பாஜக மாநில மையக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைஉள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பாஜக மாநில மையக்குழு கூட்டம் பங்கேற்ற பின் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அமலாக்கத்துறை வருமான வரித்துறை மூலம் மக்கள் பணம் வெளியே வருகிறது.
பொதுப்பணம் தனிப்பட்ட பணமாக மாறி உள்ளது. வருமான வரித்துறை அமலாக்கத்துறை சோதனையில் தெரியவந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளன. தமிழ்நாட்டின் அரசு அதிகாரிகளே ஜிஎஸ்டி வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்தார்.