தமிழகத்தில் ஐடி துறை 18 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.! அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்.!
தமிழகத்தில் கொரோனா காலத்தில் மட்டுமே ஐடி துறை 18 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. – அமைச்சர் மனோ தங்கராஜ்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் தமிழகத்தில் ஐடி துறையில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர், ஐடி துறையில் இருந்து தொலைநோக்கு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 1 டிரில்லியன் டாலர் இலக்கை எட்ட வேண்டும் என்பதே அரசின் திட்டம்.
தற்போது 100 மில்லியன் டாலர் என்ற இலக்கில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டார். மேலும், தமிழகத்தில் கொரோனா காலத்தில் மட்டுமே ஐடி துறை 18 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.